பொதுவான குணங்கள்
இவரது கைகள் நீண்டு அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். முட்டை வடிவிலான முகத்தோற்றம் கொண்டவர். இவரது கழுத்து, முதுகு, முகம், தலையிலோ மச்சம் இருக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் ஜாதகப்படி வியாபாரத்தில் அதிக நாட்டமுடையவர்களாக இருப்பர். இவர்கள் வணிகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிதாரர்கள் சினிமா துறையிலும் பெரிய புகழை அடைவர்.
கும்ப ராசிக்காரர்கள் தங்களது வீட்டு செலவைக் கூட புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவர். இவர்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அசையும்-அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே கும்ப ராசிக்காரர் திகழ்வார். கும்ப ராசிக்காராக்ளுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் இவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனினும் சிறப்பான யோகம் ஏதும் கும்ப ராசிக்காரர்களுக்கு இல்லை. செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், சொத்து சேரும் யோகம் உண்டு.
கும்ப ராசிக்காரரின் குண நலன் - தன்னம்பிக்கை, மற்றவர்களை மதித்தல், உயர்ந்த சிந்தனை போன்ற நற்குணங்கள் கொண்டவர். சுதந்திரமான போக்கு கொண்டவர். ஆனால் தனக்கென தனி விதிகளை வகுத்து அதற்கேற்ப வாழ்பவர். சம்பிரதாயங்களை மதிப்பவர். மற்ற சமூகத்தவரையும் சகோதர சகோதரி போல பாவிப்பர். மற்றவர்களுக்கு உதவி செய்வதில், சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர், ஏழைகள், ஆதரவற்றவர்கள் மீது இரக்கம் காட்டுபவர், மற்ற மதத்தினருடன் ஒற்றுமையாக பழகக் கூடியவர், மற்றவர்களையும் தன்னைப் போல நேசிப்பவர், அமைதி, உலக ஒற்றுமைக்காக பாடுபடக்கூடியவர். நவீன உலகத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடியவர், தேவைப்கேற்ப தனது புத்திக் கூர்மையை பயன்படுத்தக்கூடியவர், எளியவர்களுக்கு எளியோராய் பழகுபவர், ஒற்றுமைக்கு பாடுபடுபவர், ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர், அதற்கேற்ப வாழ்பவர்.।
பொறியாளர், விஞ்ஞானம், கல்வி துறை, வாகன தொடர்பான பணிகளில் ஈடுபடுவது நல்லது. இப்பணிகளில் சிறப்பான இடத்தைப் பெறுவர். அரசு வேலை, சமுதாய சேவைகளில் இவர்களுக்கு பேரும் புகழும் கிட்டும். எந்த வேலை செய்தாலும் அதில் புதிய நுணுக்கங்களை கண்டறிவர். அதன் மூலமும் இவர்கள் புகழ் அடைவர்.
கும்ப ராசிக்காரர்களுக்கு கருப்பு, நீலம், பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாக இருக்கும். இந்த நிறங்களால் ஆன ஆடைகளை அணிந்தால் மனதிற்கு அமைதி கிடைக்கும். எப்போதும் கருப்பு அல்லது நீல வர்ண கைகுட்டைகள் வைத்திருப்பது லாபத்தைத் தரும். எல்லா நேரத்திலும் அணியும் ஆடையில் இம்மூன்று நிறங்களில் ஏதேனும் ஒரு நிறமாவது இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் ராசிக்காரர்கள் நண்பர்களாக அமைவர். மேஷம், கடகம், சிம்ம ராசிக்காரர்கள் எதிரிகளாகவே இருப்பர். இவர்களுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பர். கும்ப ராசிக்காரர்களுக்கு நண்பர்களை விட எதிரிகளே அதிகம் இருப்பர். கும்ப ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மூலமாக வரவு கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு புகைப்படம் எடுப்பது, கதைகள் படிப்பது, புதிய வகை உணவுகளை தயாரித்துப் பார்த்தல், எலக்ட்ரானிக் பொருட்களை சரி செய்தல் உள்ளிட்டவற்றில் நாட்டம் இருக்கும்.
தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்பவர். இதனை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் பழகுவதற்கு இனிமையானவர். மன தைரியம் மிக்கவர். தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கும்ப ராசிக்காரரின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை இவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும். இவர் நல்ல காதலராகவும், துணையாகவும் இருப்பார் என்பது நிச்சயம்.
பேராசையும், சோம்பேறித்தனமும் கும்ப ராசிக்காரர்களின் முக்கிய பிரச்சினையாகும். நடந்து முடிந்த விஷயங்களை எண்ணி எண்ணி இவர்கள் வருந்திக் கொண்டே இருப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லிவிட்டாலும் கூட மனமுடைந்து போவார்கள். பயணம் செய்வது பிடிக்கும். ஆனால் எந்த பயணமும் நன்மையில் முடியாது. இதனால் பண நஷ்டமும், நேர விரயமுமே மிஞ்சும். தனது லட்சியம் நிறைவேற எந்த விதமான நடவடிக்கையையும் மேற்கொள்வர். தனது சுதந்திரத்திலோ, நடவடிக்கையிலோ வேறு யாரும் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். துற்குணங்களில் இருந்து விடுபட சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விரதம் இருக்கலாம் அல்லது ஏகாதசி, பிரதோஷ நாட்களில் விரதம் இருக்கலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு நீலக் கல் அதிர்ஷ்ட கல் ஆகும். நீலக் கல் என்பது சனி பகவானுக்கு ஏற்றது என்பதால் இவர்கள் நீலக் கல் பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. சனிக்கிழமையில் நீலக் கல் பதித்த தங்க மோதிரத்தை சனி பகவான் முன் நின்று அவரை தியானித்து கையில் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சுபச் செய்தி உங்களைத் தேடி வரும். லாபமும் அடைவீர்.
கும்ப ராசிக்காரர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் பல வெற்றிகளை அடைவர். அவர்களது எண்ணமும் தூய்மையாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு மின்சாரம், திரவம் போன்றவற்றில் பயம் இருக்கும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதை முழுமையாக செய்து முடிப்பர். அதிக ரசனை கொண்டவராக இருப்பர்.
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் விஞ்ஞானம், ஆராய்ச்சி, விமானப் படை, பி.எட். படிப்புகளில் படித்தால் வெற்றி பெறுவர்.
கும்ப ராசிக்காரர் நல்ல உடல் நலத்துடன் இருப்பர். இவர்கள் கடின உழைப்பிற்கு உகந்தவர்களாகவும் இருப்பர். பெரும்பாலும் இவர்களை நோய் அண்டாது. எனினும், வயிற்றுவலி, ஒற்றைத்தலைவலி, தொற்றுக்கள் ஏற்படலாம். இவர்களுக்கு ஏதேனும் நோய் வந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே சரியாகிவிடும் திறன் இவர்களது உடலுக்கு உண்டு. கும்ப ராசிக்காரர்கள் பலமானவர்களாக காணப்படுவர். காலில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. வயிறு, பல் சம்பந்தமான நோய்களும் வரும். ரத்த சோகை, வாயுக் கோளாறு, தோல் நோய், இதய நோய் வர வாய்ப்புண்டு. உடல்நலம் நல்ல நிலையில் இருக்க சரியான, சத்துக்கள் நிறைந்த உணவு உண்ண வேண்டும். விட்டமின் பி, சி மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
கும்ப ராசிக்காரர்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், குடும்ப சூழல், நேரம் போன்ற எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாகவும், அவர்களுக்காக எதையும் செய்பவர்களாகவும் இருப்பர். இவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், பெரும் புகழும், சீறும் சிறப்புமாக இருக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பார்வை உண்டு. இதனால் அவர்களுக்கு சனிக்கிழமைகள் அதிர்ஷ்ட தினமாகும். சனிக்கிழமைகளில் செய்யும் செயல்கள் வெற்றிகரமாக அமையும். இவர்களுக்கு வெள்ளிக்கிழமை சுபம், ஞாயிற்றுக்கிழமை பரவாயில்லை, வியாழக்கிழமை செய்யத்தேவையில்லை. சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் எந்த காரியத்தையும் கும்ப ராசிக்காரர்கள் துவக்க வேண்டாம்.
கும்ப ராசிக்காரருக்கு 4 மற்றும் 8 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்களாகும். 4ன் கூட்டு எண் 4, 13, 22, 31, 40, 58, 67 மற்றும் 8ன் கூட்டு எண்களான 8, 17,26,35,44,53,62,71,80 ஆகியவையும் அதிர்ஷ்டமாகும். இது தவிர 5, 6 எண்களும் சுபமே. 3, 7 எண்கள் பரவாயில்லை 1, 2, 9 ஆகியவை அசுபம்.
|
|
|
- தோற்றம்
- பிசினஸ்
- சொத்து
- குணம்
- வேலை
- அதிர்ஷ்ட நிறம்
- காதல் உறவு
- நட்பு
- விருப்பங்கள்
- இல்லற வாழ்க்கை
- பலவீனம்
- அதிர்ஷ்ட கல்
- பண்பியல் தொகுப்பு
- கல்வி
- உடல் ஆரோக்கியம்
- வீடு-குடும்பம்
- அதிர்ஷ்ட நாள்
- அதிர்ஷ்ட எண்
|
| |
|
|
|